mandag 4. februar 2008

'காதல் கடிதம்' விரைவில்..!

'காதல் கடிதம்' திரைப்படம் 15-01-2008 வெளிவர இருக்கின்றது.
Kadhal kaditham movie coming soon (In Europe and other countries)யேசு பாலன் பிறந்தநாளில் இனிப்பான செய்தியும் நத்தார் வாழ்த்துக்களும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் கடிதம் திரைப்படம் 15 -01-2008 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ குமரன், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் முதலில் வெளிவர இருக்கின்றது.

இதே நேரம் தமிழகத்திலும், நோர்வேயிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஒரு தாய் தந்தைக்கு பிள்ளையை பெற்று வளர்த்து, பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோஇ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப்பாறுவது போன்ற அனுபவம் கிடைக்கும். ஒரு இறுவட்டோடு ஆரம்பிக்கப் பட்ட கலைப் பயணத்தால் ஒரு திரைப்படம் உருவானது. இதயம் நிறைந்த கனவும், கடின உழைப்பும் வீண் போவதில்லை என்பதற்கு இந்த திரைப்படம் ஒன்றே எங்களுக்கு உதாரணம் போல் அமையும்.

எனதும், வி.எஸ்.உதயா அண்ணாவினுடைய கனவு நிறைவாக தார்மீகமான பொறுப்யை ஏற்று தயாரிப்புப் பணியை திறம்பட செய்த தில்லைநாதன் தில்லைவண்ணன் அவர்களை இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கோருகின்றோம். இச் செய்தியை உங்கள் இதயங்களில் வாங்கி நீங்கள் வாழும் நாடுகளிலும் திரையில் வெளியீடு செய்ய உதவி செய்ய வாருங்கள்.

உங்கள் நாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து இத்திரைப் படத்தை இணையத்தில் பத்தோடு பதினொன்றாக தரவிறக்கம் செய்து பார்க்காதீர்கள். திரைக்கு சென்று பார்த்தால் தான் அதன் முழுமை கிடைக்கும்.

வவுனியா புகையிரத நிலையத்தை யாருக்குத்தான் திரையில் பார்க்க ஆசையிருக்காது. யாழ்தேவி தொடரூந்தினை திரையில் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. இப்படி பலவிடயங்கள் உங்கள் விழிகளுக்கா விருந்து வைக்க காத்திருக்கின்றன.

காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஜி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார்.

உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ.மனோகரன்.

எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.
தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு : T.தில்லைவண்ணன் Water Falls Movie Makers.
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: B.R. ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஜ்
நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ்,
படத்தொகுப்பு : வாசு சலிம்
நிழற்ப்படம : சிற்றரசு
இப்போதைக்கு இந்த இணையத்தளத்தை பார்வையிடுங்கள் திரைக்கு வாருங்கள் பிறகு பேசலாம். http://www.wmmfilm.com/
அன்புடன்
வசீகரன்.

Ingen kommentarer: